304 நாட்கள் இருக்கின்றன க்ரிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படம் ‘டன்கிர்க்’ வெளியாக.

இரண்டாம் உலகப்போரின் போது ஒருகட்டத்தில், வடக்கு ஃப்ரான்ஸின் டன்கிர்க் என்ற இடத்தில், பெல்ஜியம்-பிரிட்டன்-ஃப்ரான்ஸ் படைவீரர்களை ஜெர்மன் வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எட்டுநாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இதுதான் டன்கிர்க் வெளியேற்றம் என்ற நிகழ்வு. இதைத் தான் சினிமாவாக்கிக் கொண்டிருக்கிறார் நோலன். முந்தைய படத்தைப் போலவே இதற்கும் ஒளிப்பதிவு ஹாய்ட் வேன் ஹாய்டமா, இசை ஹான்ஸ் ஸிம்மர் தான். இவை அனைத்தும் நோலனை தொடர்ந்து ஃபாலோ செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்… படம் பற்றி தெரியாத டீட்டெயில்ஸ் கீழே….
* இதுவரை நோலன் எடுத்திருக்கும் ஒன்பது படங்களில் பேட்மேன் பிகின்ஸுக்குப் பிறகு தொடர்ந்து ஆறு படங்களின் நடித்தவர் மைகேல் கைன் (Michael Caine). இந்தப் படத்தில் அவர் இல்லை. நோலன் படத்தில் பெரும்பாலும் மெய்ன் லீடுக்கோ, அல்லது எதாவது ஒரு கதாப்பாத்திரத்திற்கோ இறந்து போன மனைவி கண்டிப்பாக இருக்கும். அதுவும் இதில் இருக்க வாய்ப்பிலை .
* ‘ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ படத்துக்காக சிறந்த துணைநடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற மார்க் ரைலன்ஸ், நடிகர், இயக்குநர் என ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆன நடிகரும் இயக்குநருமான கென்னத் முதல் புதுமுகங்கள் ஃபியோன் வொயிட்ஹெட், ஜேக் லோடென், அனிருன் பர்னார்ட், ஹாரி ஸ்டைல்ஸ் வரை வெரைட்டியான நடிகர்களை பிடித்திருக்கிறார்.
* இதில் ஹாரி ஸ்டைல் ஒன் டைரக்ஷன் என்ற பிரபலமான பேண்டைச் சேர்ந்த பாடகர். அவரையும் விட பிரபலமானது அவரது நீளமான முடி. படத்துக்காக இவரை அழைத்த நோலன் முதலில் செய்தது அவரின் தலையில் மிலிட்டரி கட்டிங் போட்டது தான். கொஞ்சம் பிரபலம் என்பதால் இவரின் புகைப்படங்கள் மட்டும் அடிக்கடி இணையங்களில் வெளியான படியே இருந்தது. ஆனால் அது இனி நடக்காது. காரணம் அவரது ரோல் முழுவதும் படம்பிடிக்கப்பட்டு அவருக்கு டாட்டா காட்டிவிட்டார் நோலன். ” படத்தின் இறுதி வடிவத்தைக் காண காத்திருக்க முடியவில்லை” என ட்வீட்டைத் தட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார் ஹாரி.
courtesy msn.com