சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் astrologics.tamilagamtimes.com

மேஷம்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.  எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். (more…)